fbpx

வங்கக் கடலில் உருவானது மோக்கா புயல்….! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்…..!

வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக மாறியது. இந்த புயல் மியான்மர் நோக்கி நகரும் என்பதால் சென்னை உட்பட வட தமிழகத்தில் வெயில் கூடுதலாக இருக்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இத்தகைய நிலையில், தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வலுவடைந்தது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை புயலாக வலுவடைந்தது. ஆகவே நள்ளிரவு நேரத்தில் ஆதி தீவிர புயலாக மாறி, தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய மத்திய வங்க கடல் பகுதியில் நிலவ கூடும்.

அதன் பிறகு வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து, வரும் சனிக்கிழமை சற்று வலுவிழந்து ஞாயிற்றுக்கிழமை காலை தென்கிழக்கு மற்றும் வடக்கு மியான்மர் இடையே கரையை கடக்க கூடும். இது கரையை கடக்கும் சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 110 கிலோமீட்டர் முதல் 430 கிலோமீட்டர் வேகத்தில் வீசலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

Next Post

இதை யாரும் நம்பாதீங்க…..! பொது மக்களுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!

Thu May 11 , 2023
சென்னை மெட்ரோ ரயில் வேலை வாய்ப்புகள் குறித்து அதிகாரப்பூர்வமற்ற இணையதளம் மற்றும் வாட்ஸப் உள்ளிட்டவற்றில் வெளியாகும் அறிவிப்புகளை யாரும் நம்ப வேண்டாம் என்று மெட்ரோ நிர்வாகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கைவிடுத்திக்கிறது. மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு பணியாளர்களை தேர்வு செய்யும் பணி எந்த ஒரு தனி நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கும் வழங்கப்படவில்லை. அப்படி பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டால் அதற்கான முன்னறிவிப்பு சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளமான www.chennaimetrorail.org என்ற இணையதளத்தில் […]

You May Like