தற்போதைய இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட வருட பொறுமையும், நிதானமும் கொஞ்சம் கூட இருப்பதில்லை.
தற்காலத்து இளம் தலைமுறையினரிடையே சகிப்புத்தன்மை என்பது அறவே இல்லாமல் போய்விட்டது. ஆகவே எந்த ஒரு விஷயம் தங்களுக்கு பாதகமாக நடந்தாலும் அதனை பொறுமையாக பொறுத்துக் கொண்டு கடந்து செல்லும் மனநிலை யாருக்குமே இருப்பதில்லை.
தங்களை யாரும், எதுவும் சொல்லி விடக்கூடாது, தங்கள் விருப்பப்படி இருக்க வேண்டும் என்று தான் தற்போதைய இளம் தலைமுறையினர் நினைக்கிறார்கள்.ஆனால் அடுத்தவர்கள் சொல்லும் விஷயத்தில் இருக்கும் நியாயத்தை புரிந்து கொள்ள அவர்கள் தயாராக இல்லை.
அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டம் கீழக்கோடான்குளத்தைச் சேர்ந்தவர் குப்புராஜ் இவருடைய மகள் கிறிஸ்டில்லாமேரி (19) இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு வரும் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி திருமணம் நடைபெறவிருந்தது இதற்கான பணிகளில் குடும்பத்தினர் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், தான் கிறிஸ்டில்லா மேரி அவ்வபோது கைபேசியை பார்த்துக் கொண்டு வீட்டு வேலை எதுவும் செய்யாமல் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.இதனைக் கவனித்த அவருடைய தாய் உனக்கு திருமணம் நடைபெற இருக்கிறது, அதற்குள் சமையல் செய்வதற்கு கற்றுக் கொள் என கிறிஸ்டில்லா மேரியை அடிக்கடி கண்டிக்க செய்திருக்கிறார்.
தாய் கண்டித்ததால் மன உளைச்சலுக்கு ஆளான மகள் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், திடீரென்று வயலுக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு மயங்கி சரிந்தார்.
அதன் பிறகு வீட்டிற்கு வந்த அவருடைய குடும்பத்தை சார்ந்தவர்கள் கிறிஸ்டில்லாமேரி மயங்கி விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகி, அவரை மீட்டு சிகிச்சைக்காக முனைஞ்சிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அங்கு சிகிச்சை பலனின்றி கிறிஸ்டில்லா மேரி பரிதாபமாக மரணம் அடைந்தார்.
இன்னும் சில தினங்களில் திருமணம் ஆக விருந்த நிலையில் இளம்பெண் உயிரிழந்தது திருநெல்வேலி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.