புதுடெல்லி ரயில் நிலையத்தில் ரெயில்வே பணியாளர்கள் நான்கு பேர் சேர்ந்து பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
ரயில் தண்டவாள பராமரிப்புப் பணிகளுக்காக தண்டவாளம் அருகே அமைக்கப்பட்டிருந்த குடிசையில் ரயில்வே பணியாளர்கள் இருவர் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மற்ற இருவரும் குடிசைக்கு வெளியே காவலுக்கு நின்றுள்ளனர்.
நேற்று நடந்த இந்த சம்பவம் பற்றி பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், குற்றத்தில் செய்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சதீஷ்
குமாருக்கு(35), அப்பெண்ணை சில வருடங்களாக பழக்கம். சதீஷ்குமார் ரெயில்வேயில் பணியாற்றுவதாகக் சொல்லி அறிமுகம் செய்துள்ளார். இந்திய ரெயில்வேயில் அப்பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்துள்ளார்.
அந்த பெண் அவரது கணவரிடமிருந்து பிரிந்து விவகாரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், அந்த பெண் சதீஷ்குமாருடன் செல்போனில் பேசி வந்துள்ளார்.
இந்த நிலையில், தனது பிறந்தநாளை காரணம் காட்டி, விருந்து கொடுப்பதாக டெல்லிக்கு வரவழைத்துள்ளனர். டெல்லி ரெயில் நிலையம் அழைத்து வந்து அங்கிருக்கும் பராமரிப்பு பணியாளர்களுக்கான குடிசையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி அந்த பெண் புகாரளித்த இரண்டு மணி நேரத்தில் குற்றவாளிகள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.