நாலு வயது சிறுவனை கொன்று கிணற்றில் வீசிய பரபரப்பு சம்பவம்: முன்விரோதம் காரணமா? சந்தேகத்தில் போலீசார் …!

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பீகார் மாநிலத்தில் இருந்து புருஷோத் நீலாம்பரி தம்பதியினர், தமிழகம் வந்து அம்பத்தூர் அடுத்த அன்னூர் பேட்டை, கச்சினாகுப்பம் பகுதியில் குடியேறினர். புருஷோத் அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது மூன்றாவதாக நீலாம்பரிக்கு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. அதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் புருஷோத் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மருத்துவமனையில் இருந்துவிட்டு, நேற்று காலை குழந்தைகளுக்கு கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். பிறகு தனது நான்கு வயது மகன் பிரின்சிடம் 10 ரூபாய் கொடுத்து சாக்லெட் வாங்கிகொள்ளும்படி கடைக்கு அனுப்பியுள்ளார்.  

பிரின்ஸ் கடைக்கு சென்று நீண்ட நேரம் ஆகியும் ஆகியும் வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த புருஷோத் பல இடங்களில் அவனை தேடியுள்ளார். ஆனால் சிறுவன் கிடைக்கவில்லை. அன்று மதியம் ஒரு மணி அளவில் அதே பகுதியில் உள்ள அம்மா உணவகம் பின்புறம் உள்ள பாழடைந்த கிணற்றில் பிரின்ஸ் இறந்து கிடப்பதை பார்த்து துடித்து போனார் புருஷோத். இதுபற்றி தகவல் அறிந்ததும், அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பாழடைந்த கிணற்றில் மிதந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் சடலம் கிடந்த கிணற்றின் சுற்றுச்சுவர் ஒன்பது அடி உயரம் இருந்ததாலும், எனவே சுற்றுச்சுவர் மீது சிறுவனால் ஏற முடியாது என்பதாலும் சிறுவன் பிரின்ஸ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிறுவனை யாராவது கொலை செய்து பாழடைந்த கிணற்றில் வீசினார்களா, என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அம்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Baskar

Next Post

ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு போட்டித் தேர்வு..! எப்போது தெரியுமா? வெளியான முக்கிய அறிவிப்பு

Thu Jul 7 , 2022
ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு டிசம்பர் மாதம் போட்டித் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் ஆரம்பத்தில் இந்த தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அரசுப் பள்ளிகளில் பணி நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், முந்தைய அதிமுக ஆட்சியில் தகுதித் தேர்வு முதல்கட்ட தேர்வுதான் […]

You May Like