fbpx

தேர்வை சரியாக எழுதாதால் தன்னை சிலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக பொய் கூறிய சிறுமியால் பரபரப்பான டெல்லி காவல்துறை……!

தலைநகர் டெல்லியில் தேர்வை சரியாக எழுதாதன் காரணமாக, பெற்றோரின் கண்டிப்புக்கு பயந்து ஒரு சிறுமி பொய்யான பாலியல் புகார் வழங்கி, அதன் பிறகு தன்னுடைய தவறை ஒப்புக் கொண்டுள்ளார்.

அந்த சிறுமி தான் கூறியது பொய்தான் என்று ஒப்புக்கொண்டதால் சிறுமியின் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வன்கொடுமை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த வழக்கை திரும்ப பெற்றனர்.

இந்த சம்பவம் தலைநகர் டெல்லியின் வடகிழக்கு பகுதியின் நடைபெற்றுள்ளது இது குறித்து பஜன்புரா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாக காவல் துறையினரின் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

பள்ளி முடிவடைந்த உடன் 3 சிறுவர்கள் தன்னுடன் தகராறில் ஈடுபட்டதாகவும், தன்னை சில மீட்டர் தூரம் இழுத்துச் சென்று கைகளில் காயங்களை ஏற்படுத்திய இருப்பதாகவும் அந்த சிறுமி குற்றம் சுமத்தினார். சிறுமியின் இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

கண்காணிப்பு கேமரா காட்சிகளை காவல்துறையினரின் தரப்பில் ஆய்வு செய்த போது அந்த சிறுமி கூறியது பொய் என்று தெரிய வந்திருக்கிறது. ஆகவே காவல்துறையினரின் தரப்பில் அந்த சிறுமிக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதோடு பெண் காவலர்கள் அந்த சிறுமியிடம் பேசி இருக்கிறார்கள். இறுதியில் கடந்த 15ஆம் தேதி அந்த சிறுமி உண்மையை ஒத்துக் கொண்டார் என்று காவல்துறை துணை ஆணையர் ஜாய் டிர்கி தெரிவித்துள்ளார்.

அன்று சமூக அறிவியல் தேர்வு அந்த தேர்வை சரியாக எழுதவில்லை இதன் காரணமாக பெற்றோர் திட்டுவார்கள் என்று பயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே பள்ளிக்கு அருகில் உள்ள ஒரு கடைக்கு சென்று சிறுமி தின்பண்டங்களுடன் சேர்த்து பிளேடையும் வாங்கி இருக்கிறார். அதன் பிறகு தன்னை தானே காயப்படுத்திக் கொண்டு இருக்கிறார் என்று காவல்துறை ஆணையர் தெரிவித்திருக்கிறார்.

சிறுமி உண்மையை சொன்னவுடன் நீதிபதியிடம் அழைத்துச் செல்லப்பட்டு அவருடைய வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அப்போது சிறுமி தன்னை துன்புறுத்தியதாக பொய்யான குற்றச்சாட்டுகளை முன் வைத்ததாக ஒப்புக்கொண்டார். அதன் அடிப்படையில் வழக்கு ரத்து செய்யப்பட்டது. என்று காவல்துறையினரின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Post

மக்களே உஷார்..!! புதுவித சைபர் கிரைம் மோசடி..!! ஆப்பு வைக்கும் Part Time Job..!!

Tue Mar 21 , 2023
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு புதுவிதமான மோசடிகளும் அதிகரித்து வருகிறது. தற்போது பகுதி நேர வேலை மற்றும் முதலீடு என சைபர் கிரைம் குற்றவாளிகள் புதுவிதமான மோசடியில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது பகுதி நேர வேலை வேண்டுமா? என்று வாட்ஸ் அப் மூலம் மர்ம நபர்கள் தகவல் அனுப்புகின்றனர். இதற்கு நீங்கள் என்ன வேலை என்று கேட்டால் ஒரு வீடியோவுக்கான லிங்க்கை அனுப்புவார்கள். அதனை […]

You May Like