கிருஷ்ணகிரி அருகே உள்ள மாத்தூர் பகுதியில் பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுப்பது குறித்து ஏற்பட்ட பிரச்சனையில் ஒரு பெண் அடித்து கொலை செய்யப்பட்டார்.போச்சம்பள்ளி வட்டம் மாத்தூர் அருகே குள்ளம்பட்டி சந்தம் பட்டியை சேர்ந்த விவசாயி கோவிந்தசாமி என்பவரின் மனைவி மாதம்மாள்( 50) இவருக்கும், அவருடைய கணவரின் சகோதரர் சரவணன் என்பவருக்கும் இடையே புது கிணறில் தண்ணீர் எடுப்பது குறித்து பிரச்சனை இருந்து வந்தது இந்த நிலையில் கிணற்றுக்கான மின் மோட்டாரின் பியூஸ் கேரியரை மாதம்மாள் பிடுங்கி உள்ளார்.
இது குறித்து சரவணன் மற்றும் அவருடைய மனைவி செந்தாமரை உள்ளிட்டோர் மாதம்மாளிடம் நேற்று முன்தினம் தகராறு செய்திருக்கிறார்கள் அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். ஆனாலும் மாலை 6:30 மணி அளவில் செந்தாமரையின் சகோதரரான ரமேஷ் (35) என்பவர் மாதம்மாளிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக, ரமேஷ் இரும்பு கம்பியார் மாதம்மாளை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த மாதம்மாள் மயங்கி சரிந்தார். உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் மாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். உடனடியாக அந்த இடத்தில் இருந்து ரமேஷ் தப்பி சென்றார்.
ஆத்தூர் மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக மாதம்மாள் கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் அங்கு சிகிச்சை பெற்று வந்த மாதம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது தொடர்பாக வழக்கு பதிந்த மாத்தூர் காவல்துறையினர் தலைமறைவான ரமேஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.