திமுக ஆட்சிக்கு வந்து சற்றேற குறைய ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டனர். அதற்குள் அந்த கட்சியின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.எப்போதுமே ஆளும் தரப்பாக இருந்தால் எதிர் தரப்பிடம் இருந்து நிச்சயம் விமர்சனங்கள் வருவது இயல்பான விஷயம்தான் என்றாலும் கூட, ஆளும் கட்சி பதில் சொல்ல முடியாத அளவிற்கு எதிர்க்கட்சி விமர்சனம் செய்கிறது என்றால் தவறு ஆளும் தரப்பிடம் தான் இருக்கிறது என்பது ஊர்ஜிதமாகிறது.
எல்லோருமே ஆளும் தரப்பாக வரும் வரையில் அமைதியாக தான் இருக்கிறார்கள். ஆனால் அதிகாரம் அவர்களுடைய கைக்கு வந்துவிட்டால் அதன் பிறகு தான் இது போன்று தான் திமுகவை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
திமுகவின் இந்த ஒன்றரை ஆண்டுகால ஆட்சிக்கு மதிப்பெண் வழங்கும் விதமாக ஈரோடு கிழக்கு தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுக் கொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசுக்கு இந்த இடைத்தேர்தலில் எச்சரிக்கை மணி அடியுங்கள் என்று பொதுமக்களை வலியுறுத்தி இருக்கிறார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு உள்ளிட்ட பல வரிகள் அதிகரிக்கப்பட்டு இருக்கின்றனர். இதனால் பொதுமக்கள் மிகப்பெரிய இன்னல்களை சந்தித்து வருவதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சுமத்தி இருக்கிறார்.
அத்துடன் எழுதாத பேனாவிற்கு 81 கோடி ரூபாய் செலவில் எதற்காக சிலை? கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிச்சாமி அந்த தொகையை மக்கள் நலத்திட்டத்திற்கு பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளார். மேலும் உதயநிதி ஸ்டாலினின் தலையீடு காரணமாக, திரைத்துறையினர் மிகப்பெரிய இழப்புகளை சந்தித்து வருகின்றனர் என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சுமத்தி இருக்கிறார்.