கோயமுத்தூர் மாநகராட்சி 97வது வார்டு உறுப்பினராக இருப்பவர் நிவேதா. கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களிலேயே இளம் பெண் மாமன்ற உறுப்பினரான நிவேதா, திமுக கோவை கிழக்கு மாவட்ட செயலாளர் மருதமலை சேனாதிபதியின் மகள் என்று கூறப்படுகிறது. இவர் கடந்த 3 மாநகராட்சி கூட்டங்களின் தொடர்ந்து பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆகவே இவர் தன்னுடைய கவுன்சிலர் பதவியை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 பிரிவு 32(1)ன்படி தொடர்ச்சியாக மூன்று மாமன்ற கூட்டங்களில் பங்கேற்கவில்லை என்றால் உள்ளாட்சி பதவி பறிபோகும். இதுகுறித்து அடுத்து நடைபெறும் மாமன்ற கூட்டத்தில் சம்பந்தப்பட்ட கவுன்சிலர் கூட்டங்களில் பங்கேற்காதது தொடர்பாகவும் மாநகராட்சி நிர்வாகத்தால் கேட்கப்பட்ட விளக்கத்திற்கும் பதில் வழங்க வேண்டும். அவற்றை மாநகராட்சி ஆணையாளர் மாமன்ற கூட்டத்தில் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
அவர் கூறும் காரணத்தின் அடிப்படையில், தகுதி இழந்தவர்கள் மீண்டும் மாமன்ற உறுப்பினராக தொடர்வது குறித்து மாநகராட்சி மன்ற கூட்டம் முடிவு செய்யும் இதனை அடிப்படையாகக் கொண்டு, 97வது வார்டு திமுக பின் கவுன்சிலர் நிவேதா கடந்த ஜனவரி, மாதம் மே, மாதம் மார்ச் மாதம் உள்ளிட்ட 3 மாதங்களிலும் நடைபெற்ற மாமன்ற கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, அவர் இன்று முதல் கவுன்சிலர் தகுதியை இழக்க உள்ளார்.
இது தொடர்பாக மாநகராட்சி தரப்பில் விளக்கம் கேட்டு கவுன்சிலர் நிவேதாவுக்கு கடிதம் அனுப்ப மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆளும் கட்சியின் இளம் பெண் கவுன்சிலரான நிவேதா, உள்ளாட்சித் தேர்தலின்போது மேயர் வேட்பாளர்களில் ஒருவராக கருதப்பட்டார். ஆனால் எதிர்பார்த்தபடி தனக்கு மேயர்ப்பதவி கிடைக்காத நிலையில். மாமன்ற கூட்டங்களில் முறையாக பங்கேற்பதை அவர் தவிர்த்து வருகிறார். தற்சமயம் கவுன்சிலர் பதவி தகுதி இழப்பு உண்டாகும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்ற நிலையில், கவுன்சிலர்கள் மத்தியில் இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.