தமிழக ஆளுநராக ஆர் என் ரவி பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் அவர் தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அதோடு அவர் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தமிழகத்திற்கு ஆளுநராக வருகை தந்த நாள் முதல் ஆர் என். ரவி அவர்களின் பேச்சு செயல்பாடு நடவடிக்கை உள்ளிட்ட அனைத்துமே சர்ச்சைக்குரியதாகவும் மர்மமானதாகவும் உள்ளதாக கூறப்படுகிறது. அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரிக்கும் ஒரு மாநிலத்தின் ஆளுநராக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டவர் என்பதை மறந்து பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்எஸ்எஸ் ஒரு லிட்டர் அமைப்புகளின் பிரதிநிதியாக அவர் தன்னை காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார் என்று திமுகவின் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில் தான் இன்று ஆளுநருக்கு எதிராக திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகளும் ஆளுநர் மாளிகையின் முன்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கின்றன, ஆளுநருக்கு எதிராக போராட்டங்களுக்கு இதுவரையில் மறைமுகமாக ஆதரவு வழங்கி வந்த திமுக, இந்த முறை நேரடியாக களத்தில் குதித்துள்ளது. போராட்டம் மட்டுமல்லாமல் மிக விரைவில் குடியரசுத் தலைவரை சந்தித்து ஆளுநரை வாபஸ் பெறுவதற்கு வலியுறுத்தவும் அந்த கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.