பஞ்சாப் மாநிலம் லூதியானா நகரில் ஒரு முக்கிய சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் இருந்த ஹர்தீப் சிங் என்ற போக்குவரத்து காவலர் அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்துமாறு கூறியுள்ளார். ஆனாலும் வாகனத்தில் இருந்த நபர் காரை நிறுத்தாமல் வேகமாக இயக்கிய அந்த இடத்திலிருந்து தப்பித்து செல்ல முயற்சித்துள்ளார். இத்தகைய நிலையில், ஹர்தீப் சிங் மீது கார் மோதியதில் அவர் பேனட் மீது விழுந்தார்.
ஆகவே கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக மேகம் குறைந்ததால் காரில் இருந்து விழுந்த ஹர்தீப் சிங் மீட்கப்பட்டார். காரில் இருந்த இரண்டு நபர்கள் குற்றப் பின்னணி கொண்ட ரவுடிகள் என்றும், மிக விரைவில் இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர்கள் இருவரும் அந்த காரில் சட்டவிரோதமாக எதையாவது கொண்டு சென்றிருக்கலாம். ஆகவே அவர்கள் இருவரையும் காவல்துறையின் நிகர் தீவிரமாக தேடி வருவதாக கூறப்பட்டுள்ளது.