பெங்களூரு பசவனகுடியைச் சேர்ந்த சந்தீப் என்பவருக்கு கடந்த வருடம், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். இந்த திருமணம் ஆடம்பரமாக நடந்துள்ளது. பெண்ணின் தந்தை ஆறு கோடி ரூபாய் திருமணத்திற்கு செலவு செய்ததாக கூறுகின்றனர். மேலும் மாப்பிள்ளை சந்தீப்புக்கு திருமணத்தின்போது 200 கிலோ வெள்ளி, நாலு கிலோ தங்கம், 55 லட்சம் மதிப்புள்ள காரையும் வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.
இவ்வளவு செய்தும் திருமணத்திற்கு பிறகு மேலும் வரதட்சணை கேட்டு கணவர் சந்தீப்பும் அவரது பெற்றோரும் அந்த பெண்ணை கொடுமை படுத்தியுள்ளனர். இந்நிலையில் வாய் வார்த்தையால் திட்டுவது மட்டுமல்லாமல் குடித்து விட்டு வந்து அந்த பெண்ணின் தலையில் சிறுநீர் கழிப்பதுள்ளார். மேலும் நடக்கும் கொடுமையை வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதை தொடர்ந்து அந்த பெண் பெங்களூரு பசவனகுடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் சந்தீப் மற்றும் அவரது பெற்றோர் மீது பசவனகுடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.