குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவான ஏடிஎஸ் கடந்த திங்கள்கிழமை அன்று நடந்த சம்பவம் தொடர்பாக தெரிவித்திருக்கிறது. இந்திய கடலோர காவல் படை தன்னுடைய விரைவான ரோந்து வகுப்பு கப்பல்களின் ஐ.சி.ஜி.எஸ் மீரா பெஹன் மற்றும் ஐ.சி.ஜி.எஸ் அபீக் உள்ளிட்டோரை ரோந்து பணிக்காக அனுப்பியது என்று கூறப்பட்டிருக்கிறது.
அதோடு அன்று இரவு ஓகா கடற்கரையில் இருந்து 340 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய கடல் பகுதியில் ஒரு படகு சந்தேகத்திற்கு இடமாக சென்று கொண்டிருந்தது. எனவும் ஐசிஜி கப்பல்களால் சம்பந்தப்பட்ட படகு துரத்தப்பட்டது எனவும் கூறப்பட்டுள்ளது.
ஐ சி ஜி போர்டிங் குழுவின் விசாரணை என்பது அந்த படகில் சுமார் 425 கோடி ரூபாய் மதிப்பிலான 61 கிலோகிராம் போதை பொருள் கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டன. குழுவினருடன் படகு கைது செய்யப்பட்டு மேலதிகாரிகளின் விசாரணைக்காக ஓகாவிற்கு அழைத்து வரப்பட்டிருக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.