fbpx

கள்ளக்காதலனை பழிவாங்க பெண் எடுத்த விபரீத முடிவால்; பரிதவிக்கும் குழந்தைகள்..!

சென்னை, வியாசர்பாடியில் வசித்து வருபவர் வேலு. இவரது மனைவி வேதவல்லி. இவர் ஒரு சிறிய நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு பத்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒன்பத வயதில் மகளும், ஒரு வயதில் மகனும் உள்ளனர். இந்த நிலையில், வேதவல்லியின் சகோதரி, அவரை பார்க்க அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வேதவல்லி தூக்கில் தொங்கிய படி இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது சகோதரி அருகில் இருப்பவர்களுக்கும், வியாசர்பாடி காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பிறகு அவரது வீட்டில் காவல் துறையினர் சோதனை செய்தனர். இதில் வேதவல்லியின் டைரி அவர்களிடம் கிடைத்தது. அவரது டைரியில் தனது தற்கொலைக்கான காரணத்தை வேதவல்லி எழுதி வைத்திருந்தார். மேலும் அவரது டைரியில், என் சாவுக்கு காரணம் என்னுடன் வேலை பார்க்கும் தரணிராஜன் என்பவர் தான். நான் என் கணவருக்கு துரோகம் செய்துவிட்டேன். என்னுடைய மகன் என் கணவருக்கு பிறக்கவில்லை, தரணிராஜனுக்கு பிறந்தவன். ஆனால் இப்போது தரணிராஜன் என்னிடம் பேசுவததில்லை என் சாவுக்கு காரணமான தரணிராஜனை விட்டுவிடாதீர்கள், என்று எழுதி வைத்திருந்தார்.

இதை தொடர்ந்து காவல்துறையினர் பேற்கொண்ட விசாரணையில், வேதவல்லி தான் வேலை செய்து வந்த நிறுவனத்தில் கடந்த மூன்று வருடங்களாக, திருவள்ளூரை சேர்ந்த தரணிராஜன் என்பவருடன் பழகி வந்துள்ளார். இருவருக்குமிடையே இருந்த பழக்கம் கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் தரணிராஜன் வேதவல்லியுடன் பேசுவதை தவிர்த்துள்ளார்.

எனவே வேதவல்லி தரணிராஜனிடம் இது பற்றி கேட்டுள்ளார், ஆனால் அவர் வேதவல்லியிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான வேதவல்லி, தரணிராஜனை பழிவாங்க கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து தரணிராஜனை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Baskar

Next Post

இனி பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம்.. மாநில அரசு அறிவிப்பு..

Sat Aug 13 , 2022
பஞ்சாப் மாநிலத்தில் பொது இடங்களில் மாஸ்க் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.. நாள் ஒன்றுக்கு சராசரியாக 15000-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி வருகிறது.. எனவே கொரொனா பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு மாநிலங்களை அறிவுறுத்தி உள்ளது.. சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு பெரிய அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும், மாஸ்க் அணிவது சமூக இடைவெளியை […]

You May Like