அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்கக்கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக கட்சியில் செயல்படவும், உத்தரவுகளை பிறப்பிப்பதற்கும், தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், ஒற்றை தலைமையை உருவாக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யும்படியும் பிரதான கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கில் அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இடைக்கால மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்கும், பிரதான மனு மீதான விசாரணையை செப் 1-ஆம் தேதிக்கும் ஒத்திவைத்துள்ளது.