கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது. இதனை தொடர்ந்து, வெற்றி அடைந்த திமுக ஆட்சியை அமைத்தது.புது அரசாங்கம் பொறுப்பேற்ற நாள் முதல் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அந்த வகையில் தமிழக மின்சார துறை அமைச்சராக பொறுப்பேற்றவர் செந்தில் பாலாஜி இவர் மின்துறையில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார்.
அதில் ஒன்றுதான் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற திட்டம்.அதன்படி தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 2.30 கோடி மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் இருக்கின்றனர். இந்த மின் இணைப்புகளுடன் ஆதார எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின்வாரியம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
ஆதார் எண்ணை இணைக்கும் பணி சென்ற நவம்பர் மாதம் 15 ஆம் தேதி ஆரம்பமானது. 2 கோடியே 67 லட்சம் மின் நுகர்வோர் தங்களுடைய ஆதார் என்னுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க முதலில் டிசம்பர் மாதம் 31ம் தேதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதன் பிறகு இந்த அவகாசம் வரும் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் தான் சற்றேற குறைய இன்னும் 50 லட்சம் மின் இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.ஆகவே ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்னும் நீட்டிக்க படலாம் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் 30ஆம் தேதி வெளியாகலாம் என்று மின் வாரிய தெரிவிக்கின்றன.