அதிமுகவின் பொது செயலாளர் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து, இன்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவர் தன்னுடைய முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாக அதிமுகவில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் 5 வருடங்களுக்கு ஒரு முறை பயன்படுத்தினர். உரிமை சீட்டுகளை புதுப்பிக்க வேண்டும் என்ற கழக சட்டதிட்ட விதிமுறைகளின் படி கழகத்தின் உறுப்பினர்களாக இருப்பவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிப்பதற்கு புதிய உறுப்பினர்களை சேர்க்கும் விதத்திலும் புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்ப படிவங்கள் வருகின்ற 5/4/ 2023 புதன்கிழமை முதல் தலைமை கழகத்தில் விநியோகம் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
கழக உடன்பிறப்புகள் புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்ப படிவங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து ஒரு உறுப்பினருக்கு ரூபாய் 10 வீதம் தலைமை கழகத்தில் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய முதல் அறிக்கையின் மூலமாக கேட்டுக் கொண்டுள்ளார்.