திமுக ஆட்சிக்கு வந்து சற்றேற ஒன்றரை ஆண்டு காலம் நிறைவடைந்து விட்ட நிலையில், இந்த ஒன்றரை ஆண்டுகால திமுக ஆட்சிக்கு மதிப்பெண் வழங்கும் விதமாக மிக விரைவில் ஈரோடு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
ஆகவே இந்த இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் ஆளும் தரப்பான திமுக, எதிர்த்தரப்பான அதிமுக, டிடிவி தினகரன் உள்ளிட்டவர்கள் மிகக் கடுமையாக போட்டியிட்டு வந்தார்கள். இந்த நிலையில் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்கப்படாத நிலையில், அவர் வேட்பாளரை திரும்பபெறுவதாக அறிவித்துவிட்டார்.
இதற்கு நடுவில் இடைத்தேர்தலில் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் ஒன்று இணைந்து இந்த இடைத்தேர்தலில் சந்திக்க இருப்பதால் அதிமுகவின் பலம் அதிகரித்திருக்கிறது. மேலும் தற்போது டிடிவி தினகரன் இந்த இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்கப் போகிறார் என்ற கேள்வி பூதாகரமாக எழுந்திருக்கிறது.இந்த நிலையில் தான் இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பாக 12ம் தேதி தெரிவிக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.
ஈரோடு இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெறவிருக்கின்ற நிலையில், காங்கிரஸ் கட்சியின் சார்பாக இ வி கே எஸ் இளங்கோவன் அதிமுக சார்பாக தென்னரசு உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக வேட்பாளர் நிறுத்தப்பட்டு அதன் பிறகு மீண்டும் வாபஸ் பெறப்பட்டு விட்டார், இந்த நிலையில், டிடிவி தினகரன் தற்சமயம் யாருக்கு ஆதரவு வழங்குவார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
தஞ்சாவூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் எம்ஜிஆரிடமும், ஜெயலலிதாவிடமும் இரட்டை இலை சின்னம் செல்வாக்காக இருந்தது என்றும் தற்சமயம் அதன் செல்வாக்கு குறைந்து வருகிறது எனவும், தெரிவித்துள்ளார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி வசம் எடுக்கும் வரையில் தமிழகம் முழுவதும் இரட்டை இலை சின்னத்திற்கு செல்வாக்கு இருக்காது என்றும், இரட்டை இலை சின்னத்தை காட்டி கூடுதலாக ஐந்தாயிரம் அல்லது பத்தாயிரம் வாக்குகள் மட்டுமே பெற முடியுமே தவிர, தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
குக்கர் சின்னம் கிடைக்கவில்லை என்பதால் தான் தேர்தலில் போட்டியிடவில்லையே தவிர, தங்களை யாரும் நிர்பந்தம் செய்யவில்லை என்றும் டிடிவி தினகரன் விளக்கம் அளித்திருக்கிறார்.