உத்திரப்பிரதேச மாநிலத்தில் சத்னா அடுத்த பீகார்பூர் பகுதியில் வசிப்பவர் ராஜோல். 28 வயதான இளைஞருக்கு கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு காயத்ரி என்பவருடன் திருமணம் நடந்தது. சில மாதங்கள் வரை இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் ராஜோலின் தம்பி தீரஜ்க்கு, அண்ணி காயத்ரி மீது ஈர்ப்பு வந்துள்ளது. இருவருக்கும் இடையே இது கள்ள உறவாக மாறி உள்ளது. ராஜோல் வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்தனர். இந்நிலையில் இவர்களின் கள்ளக்காதல் குடும்பத்தினருக்கு தெரிய வந்தது.
குடும்பத்தினர், காயத்ரியையும், தீரஜ்ஜையும் இனி சந்திக்கக் கூடாது என கண்டித்துள்ளனர். இதனால், அண்ணியை சந்திக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார் தீரஜ். தங்கள் காதலுக்கு இடையூறாக இருக்கும் அண்ணன் ராஜோலை கொலை செய்ய திட்டமிட்டு பாலில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துள்ளனர். பூச்சி மருந்து வாடை வீசியதால் கண்டுகொண்ட ராஜோல் அந்தப் பாலை குடிக்காமல் தவிர்த்தார்.
இதனால் அவர் உயிர் தப்பினார். இதன் பிறகு மனைவி தன்னை கொலை செய்ய முயன்றதாக பிரச்சனை பூதாகரமாக வெடிக்க, பஞ்சாயத்து நடத்தி இரு வீட்டார் பேச்சுவார்த்தை நடத்தி இனி ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று காயத்ரிக்கும் ராஜூலுக்கும் அறிவுரை கூறி சென்றனர். ஆனாலும் காயத்ரிக்கு தீரஜ் உடன் உல்லாசமாக இருக்க முடியவில்லை என்கிற ஆத்திரம் இருந்து கொண்டே இருந்தது.
இதனால் தூங்கிக் கொண்டிருந்த ராஜோலை காயத்ரியும் தீரஜ்ஜும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்தனர். ராஜோல் உயிரிழந்ததும் தீரஜ் தலைமறைவானார். காயத்ரி மட்டும் கணவன் ராஜோல் உடல் அருகே அமர்ந்து அழுது கொண்டு இருந்தார். தீரஜ் தலைமறைவாக இருந்தது.மேலும் காயத்திரியின் நடவடிக்கை, காவல்துறையினருக்கு சந்தேகத்தை அளித்ததால், அவரிடம் துருவித் துருவி விசாரித்ததில் உண்மையை ஒப்புக் கொண்டார். இதை தொடர்ந்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.