fbpx

நீட் தேர்வை எதிர்கொள்ள உள்ள மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!

நாட்டில் மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் கட்டாயமாக நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த நீட் தேர்வு தேசிய தேர்வு முகமை சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடத்தில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மே மாதம் ஏழாம் தேதி நடைபெற இருக்கிறது இத்தகைய நிலையில், இந்த தேர்வில் பங்கேற்றுக் கொள்ளும் மாணவர்கள் சென்ற மாதத்தில் இருந்து neet.nta.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்து வந்தனர்.

நாடு முழுவதும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்த நீட் தேர்வை எதிர் கொள்ள இருக்கின்ற சூழ்நிலையில், இந்த நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு இன்னும் ஒரு சில தினங்களில் நுழைவு சீட்டு அனுப்பப்படும் என்று தற்போது தகவல் கிடைத்திருக்கிறது.

அதோடு நாட்டில் 4,99 நகரங்கள் மற்றும் 14 வெளிநாடுகளில் நீட் தேர்வு வரும் 7ம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் அனைத்தும் தேசிய தேர்வு முகமை மூத்த இயக்குனர் சாதனா பிரஷார் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலைக்கு முயற்சி செய்த நர்சிங் மாணவி…..! கோவையில் பரபரப்பு….!

Tue May 2 , 2023
கோவை மாவட்டத்தில் உள்ள போத்தனூரில் இருக்கும் ஒரு தனியார் நர்சிங் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த தென்காசியை சேர்ந்த மோனிஷா(18) என்பவர் முதலாம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். இவர் கடந்த இரண்டு முறை நீட் தேர்வு எழுதி இருக்கிறார். ஆனால் தற்போது நர்சிங் படித்துக் கொண்டு நீட் தேர்வில் எழுத அவர் தன்னை தயார் படுத்திக் கொண்டு வந்தார். வரும் 7ம் தேதி விண்ணப்பம் செய்திருந்தார். அவருக்கு நெல்லை மாவட்டத்தில் […]

You May Like