fbpx

அந்தப் பேனா இல்லை என்றால் இவர் ஆடு தான் மேய்த்துக் கொண்டிருப்பார்…..! அண்ணாமலையை சீண்டிய திமுக பிரபலம்…..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த இடை தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்று ஆளுங்கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட இரு கட்சிகளும் மிகத் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதோடு இந்த இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் அனல் பறக்க நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், திமுக கூட்டணியின் சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களை ஆதரித்து திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ராசா நேற்று கரட்டான் காடு பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது இந்த தேர்தல் ஈரோட்டுக்கான தேர்தல் மட்டுமல்ல தமிழகத்தில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் கிடையாது என்று கூறினார்.

மாறாக எதிர்வரும் வருடம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவின் தலையெழுத்தை மாற்றுவதற்கு இந்த தேர்தல் ஒரு அடித்தளமாக இருக்கும் என்று கருதுவதாக தெரிவித்து இருக்கிறார். எதற்காக இந்த தேர்தல் நாட்டில் முக்கியத்துவம் இருக்கிறது. என்றால் வேற்றுமையில் ஒற்றுமைக்கு மோடியால் ஆபத்து வந்திருக்கிறது. இதனை எதிர்க்க ஸ்டாலினை தவிர்த்து வேறு எந்த முதலமைச்சருக்கும் தைரியம் இல்லை என்று கூறியிருக்கிறார்.

மோடியை எதிர்த்தால் வருமான வரி சோதனை நடக்கிறது, டெல்லியில் ஜனநாயக ஆட்சியை கொண்டு வருவேன் என்று ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். அந்த பயம் மோடிக்கு இருக்கிறது அதனால் தான் மோடி டெல்லியில் இருந்து ஈரோடு தொகுதியில் எத்தனை ஓட்டுகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறப் போகிறது என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று விட்டால் தான் மோடிக்கு அந்த செய்தி போகும் பேனா சிலைக்கு என்பது கோடி ரூபாயா? என்று வினவுகிறார்கள். அந்த பேனா எந்த பேனா என்றால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிய, சைக்கிள் ரிக்ஷா வழங்கிய, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கிய சட்டத்தில் கையெழுத்திட்ட கலைஞரின் பேனாவுக்கு தான் தற்போது சிலை வைக்கப்பட இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் அந்த பேனா இல்லை என்றால் அண்ணாமலை ஆடு, மாடு மேய்த்துக் கொண்டுதான் இருப்பார். வானதி சீனிவாசன் வழக்கறிஞராக இல்லாமல் தென்னந்தோப்பில் மட்டை பொறுக்கிக் கொண்டிருப்பார். எடப்பாடி பழனிச்சாமி பிஏ படித்திருக்க மாட்டார். ஜெயலலிதா திரும்பி கூட பார்த்திருக்க மாட்டார்,

இந்த பேனா இல்லை என்றால் எதுவுமே இல்லை அதோடு தமிழ் மொழியை செம்மொழியாக்கிய பேனா அந்த பேனா அந்த பேனாவிற்கு 80 கோடி வேண்டாம் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார். இதை சொல்ல எடப்பாடி பழனிச்சாமிக்கு அருகதை இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறார் ஆ.ராசா.

அதாவது ஜெயலலிதாவிற்கு 79 கோடி ரூபாயில் எதற்காக நினைவிடம் அமைத்தீர்கள்? ஜெயலலிதா ஊழல் குற்றவாளி என்று நீதிமன்றம் தெரிவித்தது உச்ச நீதிமன்றம் குற்றவாளி என்று தண்டனை வழங்கிய ஒரு குற்றவாளிக்கு 79 கோடி ரூபாய்க்கு கல்லறை அமைத்தீர்கள். அதை நாங்கள் தாங்கிக் கொண்டிருக்கின்றோம் பெருந்தன்மையாக விட்டு விட்டோம் ஆனாலும் எத்தனையோ நலத்திட்டங்களை செய்த பேனாவிற்கு சிலை வைப்பதற்கு கேள்வி கேட்பது என்ன நியாயம் என்று கேள்வி எழுப்பி உள்ளார் ஆ.ராசா.

Next Post

திமுக முன்னாள் அமைச்சர் உடல்நலக்குறைவால் காலமானார்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்..

Sun Feb 19 , 2023
திமுக முன்னாள் அமைச்சர் உபயதுல்லா உடல்நலக்குறைவால் காலமானார்.. அவருக்கு வயது 83. தஞ்சை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக 4 முறை பதவி வகித்தவர் உபயதுல்லா.. 1989, 1996, 2001,2006 ஆகிய தேர்தல்களில் வெற்று பெற்று எம்.எல்.ஏவாக இருந்தார்.. மேலும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான திமுக அமைச்சரவையில் வணிகத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.. திமுகவின் வர்த்தக அணி தலைவராகவும், தலைமை செயற்குழு உறுப்பினராகவும் உபயதுல்லா பதவி வகித்து வந்தார்.. திமுக […]

You May Like