விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மகாராஜபுரம் பகுதியில் குடியிருப்பவர் சுந்தர்ராஜ். இவர் கடந்த 2020 ஆம் வருடம் அவரது நாலு வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதனால் அவரது குடும்பத்தில் பெரும் பிரச்சனையாகி உள்ளது.
இதை இப்படியே விட்டால் கடைசி வரைக்கும் இந்த பாலியல் தொல்லை நீடிக்கும் என்பதை உணர்ந்த குடும்பத்தினர், சுந்தர்ராஜ் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சுந்தர்ராஜ் அழைத்து விசாரணை நடத்தினர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் சுந்தர்ராஜன் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியானதை தொடர்ந்து நீதிபதி பூரண ஜெய ஆனந்த் தீர்ப்பு அளித்துள்ளார்.
பெற்ற குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த, தந்தை சுந்தர்ராஜுக்கு நான்கு ஆயுள் தண்டனை அளித்து தீர்ப்பளித்து இருக்கிறார். இந்த தண்டையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். மேலும், இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார். தமிழக அரசு பாதிக்கப்பட்ட அந்த குழந்தைக்கு பத்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைத்து உத்தரவிட்டுள்ளார் நீதிபதி.