fbpx

பைக்கை மோதுவது போல் ஒட்டி சென்றதால் ஆத்திரம்… மது போதையால் நடந்த வெறிச்செயல்…!

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வந்து, பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள மல்லிகை நகரில், வசித்து வருபவர் ஜெகராம். இவரது மகன் பரத் குமார் என்கிற பகடுராம்(35). இவர்கள் அங்கு ஸ்டீல் கடை ஒன்று வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 6 ஆம் தேதி இரவு எட்டு மணிக்கு பகடுராம் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றுள்ளார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், இதுகுறித்த பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன பகடுராமை வந்தனர்.

இந்நிலையில், பகடுராமின் பேங்க் அக்கவுண்டில் இருந்து ஜி பே மூலம்
அரியலூரை சேர்ந்த சஞ்சய் ரோஷன் என்பவரது வங்கிக் கணக்கிற்கு  ரூ.1.90 லட்சம் பணம் அனுப்பப்பியிருப்பது, காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து, சஞ்சய் ரோஷனை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்தனர். அப்போது, பெரம்பலூர் திருநகரை சேர்ந்த கார்த்திக் மற்றும் ஆலம்பாடி சாலையை சேர்ந்த கமல் ஆகியோருக்கு பணம் அனுப்பியது தெரியவந்தது. இதனையடுத்து இரண்டு பேரையும் பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் அவர்கள் பகடுராமை பீர்பாட்டிலால் குத்தி கொலை செய்து, உடலை தூக்கி கிணற்றில் வீசியது தெரியவந்தது. மேலும், கடந்த 6 ஆம் தேதி இரவு எளம்பலூர் உப்போடை அருகே பாலத்தில் கார்த்திக், கமல் ஆகியோர் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, பகடுராமின் வண்டி அவர்கள் மீது மோதுவது போல் சென்றதால், அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, அவர்கள் பகடுராமை சரமாரியாக அடித்துள்ளனர். மேலும் ஆத்திரம் அடங்காத அவர்கள் பீர்பாட்டிலை உடைத்து பகடுராமை குத்தியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உரிழந்தார். இதனை தொடர்ந்து அவரது உடலையும், மோட்டார் சைக்கிளையும் அருகில் இருந்த கிணற்றில் வீசிவிட்டு தப்பிச் சென்றனர். மேலும், பகடுராமின் செல்போனை எடுத்து, அதில் இருந்து கூகுள்பே மூலம் பணம் அனுப்பியதால் போலீசாரிடம் பிடிபட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, தீயணைப்பு துறையினர் நேற்று மாலை கிணற்றில் இருந்த பகடுராமின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர்.

Baskar

Next Post

நாளை பொதுக்குழு நடக்குமா? நடக்காதா? பரபரப்பின் உச்சத்தில் அதிமுகவினர்...!

Sun Jul 10 , 2022
சென்னை, அ.தி.மு.க.வில் ஓபிஎஸ் இபிஎஸ் இரு அணிகளுக்குள் ஒற்றை தலைமை மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. நாளை காலை 9.15 மணிக்கு பொதுக்குழுவை நடத்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் பொதுக்குழுவை நடத்த திட்டமிட்டுள்ள வானகரம் மண்டபத்தில் அனைத்து ஏற்பாடுகளும் 90 சதவீதம் ஏற்பாடு செய்து விட்டனர். பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் இன்று இரவுக்குள் சென்னைக்கு வந்துவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே, பொதுக்குழுவுக்கு […]

You May Like