fbpx

இனி தமிழகத்தில் மாதம் தோறும் மின்தடை……! மின்வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு……!

தமிழ்நாடு முழுவதிலும் இருக்கின்ற துணை மின் நிலையங்களில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் சீராக மின் பராமரிப்பு பணிகள் செய்வதற்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடல் அதிமுக ஆட்சி காலத்தில் பராமரிப்பு பணிகள் முறையாக நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக மின்துறை பல சிக்கல்களை சந்தித்து வருவதால் இதனை தடுப்பதற்கு அரசு இந்த உத்தரவை பிறப்பித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது மின்கம்பங்கள் மின் சாதனங்கள் மற்றும் மின்வாரியத்தில் இருக்கின்ற இருக்கின்ற இயந்திரங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே பராமரிப்பு பணிகள் நடைபெறும் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மின்வாரிய ஊழியர்கள் பாதுகாப்பிற்காக மின்தடை செய்யப்படுவது வழக்கமான ஒன்று.

ஆனால் கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முதல் நடைபெற்ற வந்ததால் தேர்வுகள் முடிவடையும் வரையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மின்தடை செய்யப்படாது என்று அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நிலையில், ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தேர்வு முடிவடைந்து இருக்கிறது கோடை விடுமுறை இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. ஆகவே இன்று முதல் தமிழகத்தில் வழக்கம் போல மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்றும், குறிப்பிட்ட பகுதிகளில் இனி மின்தடைகள் இருக்கும் என்றும் மின்வாரியம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

தமிழகத்தின் பள்ளி திறப்பு தேதி தள்ளிப் போக வாய்ப்பு உண்டா…..? பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!

Sat Apr 29 , 2023
நேற்றைய தினம் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து தேர்வுகளும் முடிவடைந்து இன்று முதல் கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தான் நேற்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்குப் பிறகு அவர் தெரிவித்ததாவது, கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் பள்ளி திறப்பு தேதி தொடர்பாக ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு வரை […]

You May Like