கடந்த 14ஆம் தேதி திமுக குடும்ப உறுப்பினர்களின் சொத்து பட்டியலை பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அதில் ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் திமுகவினரை சார்ந்தது தான் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் சரியாக வருமான வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்து வந்ததாக புகார் இருந்ததை தொடர்ந்து, நேற்று திடீரென்று அந்த நிறுவன அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடியாக சோதனை நடத்தியது.
அதாவது கோவை, சென்னை, திருச்சி போன்ற மாவட்டங்களில் 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றன. சென்னையில் நுங்கம்பாக்கம் ஆழ்வார்பேட்டை சேத்துப்பட்டு போன்ற பகுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை நீலாங்கரையில் உள்ள அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பாலாவின் வீட்டிலும் அதிகாலை முதலே சோதனைகள் நடைபெற்று வருகிறது.
அதேபோன்று சென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கரையில் இருக்கின்ற பாலாவின் உறவினர் மற்றும் மாமனார் வீட்டிலும் வருமானவரித்துறை சோதனை தொடர்ந்து வருகிறது. இந்த பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.