தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் அனைவரும் நிச்சயமாக விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் அது மிகவும் முக்கியம்.
தலைநகர் டெல்லியில் உள்ள நொய்டா பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவர் கடந்த 5 மாதங்களாக தன்னுடைய சக நண்பர்கள் மூன்று பேரால் பலமுறை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார்.
அத்துடன் அதனை வீடியோவாக பிரகதி செய்த அந்த மாணவியின் நண்பர்கள் இந்த சம்பவம் தொடர்பாக யாரிடமாவது தெரிவித்தால் வீடியோவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விடுவோம் என்று மிரட்டி இருக்கின்றனர்.
அத்துடன் அந்த மாணவியை குடும்பத்தோடு கொலை செய்து விடுவோம் என்றும் அவர்கள் மிரட்டி இருக்கிறார்கள்.
அவர்கள் 3 பேரும் அவர்களுடைய நண்பர்களுக்கு இந்த மாணவியை விருந்தாக்க நினைத்திருக்கிறார்கள்.
இதனால் மனமுடைந்து போன மாணவி தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார் இதனை அறிந்து அதிர்ந்து போன அவருடைய சகோதரி, அந்த மாணவியை காப்பாற்றி, அதன் பிறகு இந்த விவகாரம் தொடர்பாக அவர்களின் பெற்றோர்களிடம் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டு அதிர்ந்து போன அந்த மாணவியின் பெற்றோர் மாணவியை என்ற நிலைக்கு தள்ளிய அந்த 3 மாணவர்கள் மீதும் காவல்துறையில் புகார் வழங்கினர்.
இந்த புகாரினை அடிப்படையாகக் கொண்டு வழக்கு பதிவு செய்த டெல்லி காவல்துறையினர் தலைமறைவாக உள்ள மூவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர் அதோடு, இது தொடர்பாக அந்த மாணவியிடம் தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கிரேட்டர் நொய்டா காவல்துறை கூடுதல் ஆணையர் தினேஷ்குமார் சிங் தெரிவிக்கும் போது கடந்த 5 மாதங்களாக சக நண்பர்கள் 3 பேரால் தன்னுடைய மகள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக அவருடைய தாய் வழங்கிய புகாரினை அடிப்படையாகக் கொண்டு இந்த வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோவாக எடுத்து மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். அதோடு, மாணவியை குடும்பத்தோடு கொலை செய்து விடுவதாக மிரட்டி இருக்கிறார்கள்.
அவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள் அவர்கள் சிக்கினால் மட்டுமே அடுத்த கட்ட விவரம் தெரிய வரும் என்று கூறியிருக்கிறார்.