தமிழகத்தில் தமிழகத்தில் வரம் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இந்த திட்டத்தை மிக விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முதல் தமிழக தாய்மார்கள் வரையில் வெகுவாக வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அந்த வீடியோவில் அவர் பேசிய ஒரு சில விடயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை பாஜகவை சார்ந்த எஸ் ஆர் சேகர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோவில் உங்க அம்மாவிடம் போய் பஸ்சுக்கு காசு கேட்காதே, நீ பசங்களோட சினிமாவுக்கு போனா அங்க பணம் கேட்காதே, ஒரு செல்போன் வாங்கி வைத்துக் கொள்.
நைசாக பேசி என்ன வேணும்னாலும் பண்ணு, மாணவிகளுக்கு1000 ரூபாய் கொடுக்கப் போகிறோம் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியிருக்கிறார். ஏற்கனவே செப்டம்பர் 15ஆம் தேதி முதல் பெண்களுக்கு 1000 ரூபாய் கொடுக்க போகிறோம் என்றும் கூறியுள்ளார் அமைச்சர் துரைமுருகன்.