கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் கீழத் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் இவருடைய மனைவி அய்யம்மாள் இவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிகளுக்கு 3 மகன்கள் இருக்கின்றன. இத்தகைய நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்த அய்யம்மாள் திருநெல்வேலி அண்ணா நகரில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்தார்.
இத்தகைய சூழ்நிலையில் நேற்றைய தினம் அய்யம்மாள் பணி முடிவடைந்து வீடு திரும்பியபோது அவரை இடைமறித்த பாலசுப்ரமணியன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி அய்யம்மாளை சரமாரியாக குத்திவிட்டு மனைவியின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்திருக்கிறார். இதில் அய்யம்மாள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அய்யம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணையை ஆரம்பித்தனர். இத்தகைய நிலையில், தப்பிச் சென்ற பாலசுப்பிரமணியன் கோவில்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கிறார். அவரை கைது செய்த காவல்துறையினர் மனைவியை கொலை செய்ததற்கான காரணம் தொடர்பாக தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.