புலம்பெயர்ந்த வட மாநிலத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் அவ்வப்போது தாக்கப்படுவதாக உண்மைக்கு புறம்பான பொய்யான தகவல் இணையதளத்திலும் சமூக வலைதளங்களிலும் விஷமிகள் மூலமாக பரப்பப்பட்டுள்ளது.
அவ்வாறு பொய்யான செய்தியை பரப்பியவர்கள் யார், யார் என்று அடையாளம் காணப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இதற்கு நடவடி பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமாரை தொலைபேசியின் மூலமாக தொடர்பு கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்று உறுதிப்பட தெரிவித்தார்.
தமிழகத்தில் இருக்கின்ற வடமாநில தொழிலாளர்கள் அச்சம் காரணமாக, பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம் என்று தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்திருக்கிறார். அதோடு, தமிழக மக்கள் மிகவும் நல்லவர்கள் அதோடு நட்பானவர்கள் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மாநில அரசு உறுதி கொண்டுள்ளது என்றும் ஆளுநர் கூறியிருக்கிறார்.
இந்த சூழ்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆளுநர் ஆர். என். ரவி தன்னுடைய வலைதள பக்கத்தில் தமிழ்நாட்டில் இருக்கின்ற வட மாநில தொழிலாளர்கள் பயம் காரணமாக, பாதுகாப்பாற்ற உணர்வுடன் இருக்க தேவையில்லை. தமிழக மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றும் நட்பானவர்கள் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மாநில அரசு உறுதியுடன் இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.