தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இருக்கின்ற முக்கிய சுற்றுலா தளமாக வண்டலூர் உயிரியல் பூங்கா திகழ்ந்து வருகிறது. இந்த உயிரியல் பூங்காவிற்கு தற்சமயம் கோடை காலம் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து இருக்கிறது.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து இருப்பதால் தற்சமயம் வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதாவது, வண்டலூர் உயிரியல் பூங்காவில் செவ்வாய்க்கிழமை தோறும் விலங்குகளின் பராமரிப்பு பணிக்காக ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும்.
இத்தகைய நிலையில், தற்சமயம் விடுமுறை என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் மே மாதம் முழுவதும் அனைத்து நாட்களும் விடுமுறை இன்றி அந்த உயிரியல் பூங்கா செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன் பின்னர் விலங்குகளின் சூட்டை தணிப்பதற்காக விலங்குகளின் மீது அடிக்கடி தண்ணீர் பீச்சி அடிக்கப்படும்.
இதே போல பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக ஆங்காங்கே குடிநீர் வசதிகளும் அமைக்கப்பட்டிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. அதோடு வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுற்றி பார்ப்பதற்கு பெரியவர்களிடம் 90 ரூபாயும், சிறியவர்களிடம் 50 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.