கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அழகுராஜா சட்டவிரோதமாக பணம் நகை உள்ளிட்டவற்றை கொண்டு செல்லும் குருவியாக செயல்பட்டு வந்ததார். இத்தகைய நிலையில், அழகுராஜா சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலமாக சென்னைக்கு வந்தார். அதன் பிறகு மண்ணடியில் இருந்து 30 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்துடன் திருவல்லிக்கேணி நோக்கி இரு சக்கர வாகனத்தில் 2 நாட்களுக்கு முன்னர் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மன்றோ சிலை அருகே காவல்துறையினரின் சீருடை நின்றிருந்த 2 பேர் தங்களை காவல்துறை அதிகாரிகள் என்று தெரிவித்துக் கொண்டு, அழகுராஜாவை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் 30 லட்சம் ரூபாய் பணத்திற்கான ஆதாரத்தை கேட்டிருக்கிறார்கள். அழகுராஜாவிடம் முறையான ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்வதாக தெரிவித்து அந்த பணத்துடன் இருவரும் தப்பிச் சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அழகு ராஜா, இது தொடர்பாக எஸ் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, 30 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றது ஆயுதப்படை காவலர் செந்தில் மற்றும் அவருடைய நண்பர் டைசன் உள்ளிட்டோர்தான் என்பது தெரியவந்தது. ஆகவே இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். தலைமறைவாக இருக்கின்ற மேலும் இருவரை தீவிரமாக தேடி வருகின்றன.