இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. என்றும் நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல நாளை முதல் வரும் 21ஆம் தேதி வரையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில், ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ததற்கான வாய்ப்பு இருக்கிறது. அதேபோல இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸில் இருந்து, 39 டிகிரி செல்சியஸ் வரையில் இருக்கும் எனவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸில் இருந்து, 30 டிகிரி செல்சியஸ் வரையில் இருக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது.
அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் முதல்,, 40 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸில் இருந்து, 30 டிகிரி செல்சியஸ் வரையில் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது