தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. பொதுவாக மே மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்னதாகவே அதாவது, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களிலேயே கோடை வெயிலின் தாக்கம் மக்களை வாட்டத் தொடங்கி விட்டது.
இத்தகைய நிலையில், அக்னி நட்சத்திரம் இன்றைய தினம் முதல் வரும் 29ஆம் தேதி வரையில் நீடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும், அனல் காற்று வீசும் என்று சொல்லப்படுகிறது. அக்கினிக்கு முன்பாகவே பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு மேல் பரவி இருப்பதால் எதிர்வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில் தான் இந்திய வானிலை ஆய்வு மையம் ஒரு தகவலை தெரிவித்துள்ளது. அதாவது மே மாதம் பத்தாம் தேதி பிறகு வெயிலின் தாக்கம் மேலும் அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளது. கடந்த ஒரு வார காலமாகவே மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தின் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்படுகிறது.
இந்த நிலையில் தான் வரும் 7ம் தேதி வங்கக்கடல் பகுதியில் காட்டெடுத்தாலும் பகுதி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இது புயலாக உருமாருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் கரையில் கடந்த பின்னர் அதாவது மே மாதம் 10ம் தேதிக்கு பின்னர் மறுபடியும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.