குஜராத் மாநிலத்திற்குள் கடல் மூலமாக போதை பொருள் கடத்தி வரப்படுவது தொடர்பாக நடைபெற்று வருகிறது. அந்த விதத்தில், நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஒருவரை குஜராத் தீவிரவாத எதிர்ப்பு படை காவல்துறையினர் கைது செய்து விசாரித்தனர்.
அந்த விசாரணையில், குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் மாவட்டம், பத்தரி தாலுகாவில் ஹெராயின் போதை பொருளை பதுக்கி வைத்திருப்பதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, 31 கிலோ ஹெராயினை தீவிரவாத எதிர்ப்பு படை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதோடு சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு 217 கோடி என்று கூறப்படுகிறது.
ஆகவே நைஜீரிய நாட்டு பிரஜையை காவல்துறையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரை வருகின்ற மே மாதம் 24 ஆம் தேதி வரையில் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.