திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியை சேர்ந்த ராஜபாண்டியன் இவர் இந்து மக்கள் கட்சியின் தென் மண்டல தலைவராக இருக்கிறார். மேலும் இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், பாளையங்கோட்டை கேடிசி நகரில் வசித்து வரும் பாலகுமாரன் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இத்தகைய சூழ்நிலையில் தான் பாலகுமாரின் மனைவி கீதா தன்னுடைய அவசர தேவைக்காக ராஜபாண்டியனிடம் மூன்று லட்சம் ரூபாய் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். வட்டி பணத்தை கீதா சரியாக செலுத்தி வந்திருக்கிறார் இத்தகைய நிலையில், ராஜபாண்டியன் கூடுதலாக வட்டி கேட்டதாக கூறப்படுகிறது ஆகவே கீதா கடந்த மாதம் வட்டி பணத்தை செலுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் கீதாவின் வீட்டிற்கு சென்ற ராஜபாண்டியன் அவரை அவதூறாக பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
அவரை திட்டியது மட்டுமல்லாமல் கீதாவை பிடித்து கீழே தள்ளி விட்டதாகவும், ராஜபாண்டியன் மீது கீதா பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ராஜபாண்டியன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதோடு அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கந்து வட்டி கேட்டு மிரட்டல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.