fbpx

வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி…?

பணப்பாரிமாற்றம் அல்லது அரசின் திட்டங்களின் பலன்கள் எதுவாக இருந்தாலும், அவை அனைத்திற்கும் வங்கி கணக்கு அவசியமாக இருக்கிறது. இல்லை என்றால் தங்களுடைய வங்கி கணக்கு செயலிழக்க நேரலாம் அது போன்ற சூழ்நிலையில் தங்களுடைய வங்கி கணக்கையும், ஆதார் எண்ணையும் இணைப்பது அவசியமாகிறது.

அப்படி செய்தால் தான் தாங்கள் அரசின் திட்டங்களின் பலன்களை பெற இயலும். ஆகவே தாங்களும் தங்களுடைய வங்கி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்க விரும்பினால் இதற்காக எந்த ஆவணங்கள் தேவைப்படும் என்பதை தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஆதார் எண், வங்கி கணக்கு எண், ஆதார் அட்டையின் புகைப்பட நகல், வங்கி கணக்கு தொடர்பான தகவல், பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண் உள்ளிட்டவை இதற்கு தேவையான ஆவணங்களாக இருக்கின்றன.

மேலும் ஆதார் மற்றும் வங்கி கணக்கை கைபேசி பயன்பாடு மூலமாகவும், அதேபோல வங்கிக்கு சென்று வங்கியின் மூலமாகவும் இணைத்துக் கொள்ளலாம். மேலும் வங்கி ஏ எம் டி மூலமாக குறுஞ்செய்தியின் மூலமாகவும் தொலைபேசி அழைப்பு மூலமாகவும் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.

ஆதார் எண் அதிகாரப்பூர்வ வலைதளத்தை பார்வையிட்டு வங்கி கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா? என்பதை சரி பார்த்துக் கொள்ளலாம். அதோடு மெனுவில் தங்களுடைய கர்சரை வைத்து கிளிக் செய்தால் ஆதார் மற்றும் வங்கி கணக்கு எண் இணைக்கும் நிலையை சரி பார்த்துக் கொள்ளலாம். அதோடு ஆதார் சேவைகள் பிரிவின் கீழ் தங்களுடைய ஆதார் நம்பரையும், பாதுகாப்பு குறியீட்டையும் உள்ளிட வேண்டிய புதிய பக்கத்திற்கு நீங்கள் அனுப்பபடுவீர்கள்.

தற்போது தாங்கள் ஓடிபி அனுப்பு என்பதை கிளிக் செய்யவேண்டும், விருப்பம் மற்றும் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணில் குறியீட்டை நீங்கள் பெறுவீர்கள். ஓடிபி எண்ணை உள்ளிட்டு உள்நுழைவை அழுத்த வேண்டும், நீங்கள் நிலையை சரிபார்க்க ஒரு புதிய பக்கம் திறக்கும்.

Next Post

#Alert: மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி...! இந்த மாவட்டத்தில் கனமழை...! மீனவர்களுக்கு எச்சரிக்கை ‌‌‌...!

Tue Dec 20 , 2022
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது ‌. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது அடுத்த இரண்டு தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும். இதன் காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது […]

You May Like