தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருக்கின்ற வனஸ்தலிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் இவர் போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கிறார். இவருக்கு சோபனா என்ற பெண்ணுடன் 15 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் ராஜ்குமார் காவல் பணியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. ராஜ்குமாருக்கும், அவருடைய மனைவி ஷோபனாவுக்கும் கடந்த சில மாதங்களாகவே தகராறு இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தான் ராஜ்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு உள்ளதாகவும் இதற்காக விவாகரத்து மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து விவாகரத்து கேட்டு வற்புறுத்தி வந்ததாகவும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இந்த விவகாரம் குறித்து இரு வீட்டாரும் தலையிட்டு சமாதானம் செய்து வந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
ஆனாலும் கணவர் ராஜ்குமார் மனைவி மீது சமீப காலமாக கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தி, அவரை கொடுமைப்படுத்தி வந்திருக்கிறார். இதனை கண்டிக்கும் விதமாக, கடந்த வியாழக்கிழமை சோபனாவின் சகோதரர் ராஜ்குமார் பணியாற்றும் இடத்திற்கு சென்று அவரை தட்டிக் கேட்டிருக்கிறார்.
இதனால் ஆத்திரம் கொண்ட ராஜ்குமார், வீட்டிற்கு வந்து தன்னுடைய மனைவி ஷோபனாவிடம் தகராறு செய்து அவரை அடித்துள்ளார். அப்போது அவருடைய 15 வயது மகனும் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த சிறுவன் தந்தையை தடுக்க முயற்சி செய்திருக்கிறான். ஆனாலும் அவனுடைய முயற்சி பலனளிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதனால் பயந்து போன மனைவி ஷோபனா வீட்டிலிருந்து தப்பிச்செல்ல முயற்சித்து இருக்கிறார். ஆனால் ஆத்திரத்தில் இருந்த ராஜ்குமார், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்திருக்கிறார். தந்தையை தடுக்க முயற்சி செய்த மகனும் இதில் காயமடைந்திருக்கிறார்.
மனைவி ஷோபனா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை பார்த்த ராஜ்குமார், அங்கிருந்து தப்பி சென்று தலைமறைவானார். இந்த நிலையில், ராஜ்குமாரின் மகன் காவல் துறையிடம் வழங்கிய புகாரை அடிப்படையாகக் கொண்டு, சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் சோபனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார். அதோடு நேரடி சாட்சியமான ராஜ்குமாரின் மகனிடம் வாக்கு மூலம் பெற்ற காவல்துறையினர், ராஜ்குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.