fbpx

மயிலாடுதுறையில் காணாமல் போன கோவில் சிலைகள்…..! அமெரிக்க மியூசியத்தில் கண்டுபிடிப்பு…….!

தமிழகத்தில் கும்பகோணம் சரகத்தில் உள்ள தஞ்சை திருவாரூர் நாகை மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கின்ற பழமையான கோவில்களுக்கு சொந்தமான சேலைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் சிறப்பு தணிக்கை செய்து வருகிறார்கள்.

அந்த விதத்தில், கடந்த மாதம் 15 ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் கொருக்கை கிராமத்தில் தர்மபுரம் நிர்வாகத்தில் உள்ள அருள்மிகு விரட்டேஸ்வரர் திருக்கோவிலில் சிலை கடத்தல் தடிப்பு பிரிவு காவல்துறையினர் தணிக்கை செய்தனர் அப்போது கோவிலில் இருந்த வீணாதார தட்சிணாமூர்த்தி சிலைக்கு பதிலாக போலீஸ் சிலை வைக்கப்பட்டுள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆகவே பாண்டிச்சேரி உள்ள மியூசியத்தில் இருந்த காணாமல் போன சிலையின் பழைய புகைப்படத்தை எடுத்து பல்வேறு அருங்காட்சியகங்களின் வலைதள பக்கத்தில் இருக்கின்ற சிலைகளின் படங்களுடன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் ஒப்பிட்டு பார்த்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் அமெரிக்காவில் உள்ள கிலேவ்லேண்ட் அருங்காட்சியகத்தின் வலைதளத்தில் காணாமல் போன தட்சணாமூர்த்தி உலோக சிலை இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவில் உள்ள தட்சணாமூர்த்தி சிலையை மீட்டு தமிழகத்திற்கு கொண்டுவரும் பணிகளில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றன. அதோடு இந்த சிலையானது கோவிலில் இருந்து எப்படி திருடு போனது என்றும் விசாரணை நடத்தி வருகின்றன.

Next Post

கடையநல்லூர் பகுதியில் காமராஜர் திறந்து வைத்த பள்ளியில் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்…..! முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு….!

Tue May 2 , 2023
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நூற்றாண்டை தாண்டிய தாருஸ்ஸலாம் பள்ளியின் 2023 ஆம் ஆண்டிற்கான முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு மற்றும் பெருநாள், சந்திப்பு நாள் நடைபெற்றது. 700க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவிகள் இந்த விழாவில் பங்கேற்றுக் கொண்டனர். கடையநல்லூரில் உள்ள இந்த பள்ளி 100 வருடங்கள் பழமை வாய்ந்த பள்ளி என்று கூறப்படுகிறது. இந்த பள்ளியில் காமராஜர் வந்து பார்வையிட்டதாகவும், சுதந்திரத்திற்கு முன்பாகவே இந்த பள்ளி கட்டமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. […]

You May Like