fbpx

சரக்கு பாட்டில் போச்சுன்னா, வர்ற வெறித்தனமான ஆத்திரம் இருக்கே… அது எதுல போய் முடிஞ்சிருக்குன்னு பாருங்க…!

கோவை துடியலூர் ஜி.என்.மில் அடுத்த எஸ்.என். பாளையம் பட்டத்தரசியம்மன் கோவில் வீதியை வசித்து வருபவர் பரத்குமார் (24). சம்பவத்தன்று இவர் தனது நண்பர் ரமேஷ் என்பவருடன் எஸ்.என். பாளையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு குடிக்க சென்றார். அங்கு தனது நண்பருடன் அமர்ந்து குடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது பரத்குமார் அருகில் அமர்ந்து குடித்து கொண்டு இருந்த நபரின் மது பாட்டிலை தெரியாமல் தட்டி விட்டார். இதனால் இரண்டு பேருக்கம் இடையே வாக்குவாதம் நடந்தது. அங்கிருந்தவர்கள் இரண்டு பேரையும் சமாதானப்படுத்தினர். பின்னர் பரத்குமார் தனது நண்பருடன் அங்கிருந்து சென்றார். இதனை
பார்த்த அந்த நபர் அவர்களது பின்னால் வந்து மீண்டும் அவரிடம் வாக்குவாதம் செய்தார். இதனால் அவர்களுக்கு இடையே மறுபடியும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அந்த நபர் தகாத வார்த்தைகளால் பேசி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பரத்குமாரை குத்திவிட்டு, மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்று விட்டார்.

கத்தியால் குத்தியதால் பலத்த காயம் அடைந்த பரத்குமாரை அவரது நண்பர் ரமேஷ் மீட்டு அருகில் உள்ள பிரைவேட் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்கு சேர்த்தார். இதுகுறித்து பரத்குமார் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் அதே பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (42) என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

Baskar

Next Post

மாறி மாறி முறையிட்ட ஓபிஎஸ் - இபிஎஸ்... தேர்தல் ஆணையம் முக்கிய முடிவு...

Tue Jul 12 , 2022
பல சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் இடையே சென்னை வானகரத்தில் நேற்று அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அதிமுக கட்சி விதிகள், கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்-ஐ நீக்குவதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்ட நிலையில், இபிஎஸ்-ஐ நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்திருந்தார்.. இதை தொடர்ந்து எடப்பாடி […]
விரைவில் வருகிறது ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்..!! எதற்காக..? யாருக்காக தெரியுமா..?

You May Like