கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள தொளார் கிராமத்தில் வசித்து வருபவர் கொளஞ்சி (55) இவருடைய கணவர் ராதாகிருஷ்ணன் சில வருடங்களுக்கு முன்னர் இயற்கை எய்தி விட்டார். இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லாததன் காரணமாக, கொளஞ்சி தன்னுடைய தங்கையின் மகளான சீதாவை வளர்த்து வந்தார்.
இந்த சூழ்நிலையில் தான் தங்கையின் மகளை அதே கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் (36) என்ற நபருக்கு திருமணம் செய்து வைத்தார் என்று கூறப்படுகிறது மேலும் அன்பழகன் விவசாயம் செய்து கொண்டு கரும்பு டிராக்டரை ஒட்டி வந்திருக்கிறார்.
இப்படியான நிலையில், அன்பழகனின் உறவினரான செல்லதுரை (55) என்ற நபருடன் கொளஞ்சிக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் நாட்கள் செல்ல, செல்ல இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மலர்ந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து கணவன், மனைவியை போல வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இது பற்றி தெரிந்து கொண்ட மருமகன் அன்பழகன் மாமியார் கொலஞ்சியை பலமுறை கண்டித்து இருக்கிறார். இதன் காரணமாக, அன்பழகனுக்கும், செல்லதுரைக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. ஆனாலும் மருமகன் சொல்வதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மாமியார் கொளஞ்சி தன்னுடைய கள்ளக்காதலை தொடர்ந்து உள்ளார்.
இந்த சூழ்நிலையில், இரவு 11 மணியளவில் வீட்டின் அருகே கொளஞ்சியம் செல்லதுரையும் உரையாடிக் கொண்டிருந்தபோது இதனை பார்த்த கொளஞ்சியின் மருமகன் அன்பழகன் வீட்டில அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரை வேகமாக ஓட்டிச் சென்று இருவர் மீதும் மோதி இருக்கிறார். இதில் கொளஞ்சியும் செல்லதுரை உடல் நசுங்கி இரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அன்பழகன் நடந்ததை காவல் துறையினரிடம் தெரிவித்து டிராக்டருடன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் களஞ்சியின் சொத்துக்கள் செல்லதுரைக்கு சென்று விடும் என்ற காரணத்தால், இருவரையும் அன்பழகன் கொலை செய்திருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது.