ஓசூர் பார்வதி நகரை சேர்ந்தவர் சக்தி (35) இவர் கட்டிடத் தொழிலாளியாக இருக்கிறார். இவருடைய மனைவி நந்தினி (25) இவர்களுக்கு பிரவீன்(7) மற்றும் ஜெகநாதன்(3) உள்ளிட்ட 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் சக்தி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து நந்தினிக்கு அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது.
இதனைத் தொடர்ந்து கணவன், மனைவி போல இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர் நந்தினி தன்னுடைய 2து மகன் ஜெகநாதனை தன்னுடன் வளர்த்து வந்த நிலையில், மூத்த மகன் பிறவினை வெளியூரில் தங்கி படிக்க வைத்து வந்திருக்கிறார். சென்ற வருடம் டிசம்பர் மாதம் 6ம் தேதி ரஞ்சித் நந்தினி உடன் உல்லாசமாக இருந்தபோது குழந்தையால் இடையூறு ஏற்பட்டிருக்கிறது இதன் காரணமாக ஆத்திரமடைந்த ரஞ்சித் குழந்தை என்று கூட பார்க்காமல் ஜெகநாதனை பீர் பாட்டிலால் தலையில் அடித்திருக்கிறார். இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த குழந்தை ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது. அங்கு முதலுதவி வழங்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது.
இதனை தொடர்ந்து, இருவரும் குழந்தையை கடந்த டிசம்பர் மாதம் 22ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தனர். வீட்டில் இருந்த குழந்தை டிசம்பர் மாதம் 25ஆம் தேதி வாந்தி எடுத்த சிறிது நேரத்தில் உயிரிழந்தது. இதனை தொடர்ந்து யாருக்கும் தெரியாமல் குழந்தையை புதைத்திருக்கிறார்கள்.
ஆனால் காவல்துறையினருக்கு எப்படியோ இந்த விவகாரம் தெரிந்து விட்டது. இதனை தொடர்ந்து ரஞ்சித்தை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள் காவல் துறையைச் சார்ந்தவர்கள்.