இந்த சமூகத்தில் பெண்கள் என்றால் அனைவரும் கிள்ளு கிரையாக நினைத்து விடுகிறார்கள். பெண்கள் என்றாலே ஆண்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கும், ஆண்களுக்கு சேவை செய்வதற்கும் தான் என்று இன்றும் பலர் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் சமூகத்தில் பெண்களை பற்றி ஆராய்ந்து பார்த்தால், ஆண்களை விட பல துறைகளில் பெண்கள் கோலோச்சி இருக்கிறார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
பீகார் மாநிலத்தின் வைசாலி மாவட்டத்தில் ராஜபாக்கர் பகுதியைச் சேர்ந்த ரோஷன் என்ற நபருக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது.இந்த நிலையில் தான் திருமணத்திற்கு முந்தைய நாள் நடந்த பூஜா நிகழ்ச்சியில் பெண்கள் சிறுமிகள் என்று பலர் நடனமாடி கொண்டாடினர்.
இந்த நடன நிகழ்ச்சியில் திடீரென்று குறிப்பிட்ட உள்ளூர் இளைஞர்கள் சிலர் தங்களுடன் நடனம் ஆட வேண்டும் என்று பெண்களை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. தொடர்ச்சியாக ஆண்களை வெளியேறுமாறு பெண்கள் கோஷமிட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு உண்டானது.
இந்த நிலையில், தங்களை இழிவுபடுத்திய பெண்களை பழிவாங்க வேண்டும் என்று இளைஞர்கள் திட்டமிட்டதாக சொல்லப்படுகிறது.
தங்களுக்கு எதிராக கோஷமிட்ட பெண்கள் கூட்டத்தில் இருந்த ஒரு சிறுவியை அந்த இளைஞர்கள் கடத்திச் செல்ல முயற்சி செய்ததாக சொல்லப்படுகிறது. சுதாரித்துக் கொண்ட அந்த சிறுமி, இளைஞர்களிடமிருந்து தப்பி தன்னுடைய பாட்டி வீட்டிற்குள் நுழைந்ததாக தெரிகிறது.
இந்த சூழ்நிலையில் தான் மறுநாள் காலை வீட்டை விட்டு வெளியே வந்த சிறுமியை அந்த இளைஞர்கள் கடத்திச் சென்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இளைஞர்கள் கையில் வைத்திருந்த பெட்ரோலை சிறுமியின் மீது ஊற்றி அவருக்கு தீ வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுமியின் மீது தீ வைத்ததால் அவருடைய அலறல் சத்தத்தை கேட்டு அந்த பகுதிக்கு வந்த ஊர் மக்கள் அந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.சிறுமி வழங்கிய புகாரினை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமுறைக்கான இளைஞர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.