மத்திய ரயில்வேயில் கடந்த 19-ஆம் தேதி புதிய பத்து ஏ.சி. மின்சார ரயில் சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டன. ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த சாதாரண மின்சார ரெயில்களுக்கு மாற்றாக இந்த ஏ.சி. மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. எனவே இந்த புதிய ஏ.சி. ரயிலுக்கு எதிராக பயணிகள் போராட்டம் செய்தனர். மேலும் அவர்கள் பழயபடி சாதாரண மின்சார ரயில்களை இயக்குமாறு வலியுறுத்தினர்.
இதேபோல அரசியல் தலைவர்களும் மீண்டும் சாதாரண ரெயில்களை இயக்குமாறு கேட்டுக் கொண்டனர். இந்தநிலையில் கடந்த 19-ஆம் தேதி முதல் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட பத்து ஏ.சி. மின்சார ரயில் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள தகவலில், புதிய ஏ.சி. ரயில்கள் இயக்கப்பட்ட அதே நேரத்தில், ஏற்கனவே உள்ளது போல சாதாரண மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் மத்திய ரயில்வே, சாதாரண மின்சார ரெயில்களுக்கு பதிலாக ஏ.சி. மின்சார ரயில் இயக்குவதை கைவிட்டு, புதிய நேரத்தில் ஏ.சி. மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர்.