fbpx

நாடு முழுவதும் அதிகரிக்கும் கொரோனா தொற்று பரவல்….! ஒரே நாளில் 21 பேர் பலி….!

நாடு முழுவதும் மீண்டும் நோய் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. மேலும் இந்த நோய் தொற்று பரவலை கட்டுக்குள் வைப்பதற்கு அனைத்து மாநில அரசுகளும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கை செய்திருந்தது.

இந்த நிலையில், நாட்டில் நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53,720 என்று அதிகரித்துள்ளது. நோய் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 6,628 என இருக்கிறது. அதோடு இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் புதிதாக1,167 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனை தொடர்ந்து, உத்தரபிரதேசத்தில் 485 பேரும், ஹரியானாவில் 398 பேரும், தலைநகர் டெல்லியில் 349 பேரும், ராஜஸ்தான் மாநிலத்தில் 290 பேரும் இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதோடு தமிழகம் உட்பட சத்தீஸ்கர், குஜராத், ஒடிசா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் நோய் தொற்று பாதிப்பு கணிசமாக அதிகரித்து இருக்கிறது. நோய் தொற்று பாதிப்பு மேலும் அதிகரித்து வருவதன் காரணமாக, பொதுமக்கள் வெளியே செல்லும்போது மொகக்கவசம் அணிவதற்கும் சமூக இடைவேளையை பின்பற்றுவதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Next Post

நடிகர் கமலை வைத்து ஏன் படம் எடுக்கவில்லை…..? உண்மையை உடைத்துக் கூறிய முருகதாஸ்….!

Sat Apr 15 , 2023
தமிழ் சினிமாவை பொருத்தவரையில் அனைத்து இயக்குனர்களும் எப்படியாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதே போல தான் கமல்ஹாசன் தேர்வும் இருக்கும் ஆனால் சமீப தேசிங்குராஜா, சக்கரவர்த்தி, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோருக்கு ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் விக்ரம் திரைப்படத்தில் நடித்த மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அண்மையில் இது தொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு […]

You May Like