fbpx

அரிய வகை நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்த இந்திய நிறுவனங்கள்… 10 கோடி குழந்தைகளுக்கு பலன்.!

இந்திய அரசின் உதவியுடன் இந்திய மருந்து கம்பெனிகள் அறிமுகப்படுத்தி இருக்கும் நான்கு மருந்துகள் அரிய வகை நோய்களுக்கு நிவாரணியாக இருப்பதோடு அந்த நோய்களை குணப்படுத்துவதற்கு ஆகும் மருத்துவ செலவை 100 மடங்கு குறைத்து இருக்கிறது. இது இந்திய மருத்துவத்துறையில் மிகப் பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

இந்த அரிய வகை நோய்கள் பெரும்பாலும் குழந்தைகளை தாக்குவது மற்றும் மரபணு சார்ந்த நோய்களாக இருக்கின்றன. இவற்றிற்கு ஆகும் மருத்துவ செலவு பல மடங்காக இருந்து வந்த நிலையில் தற்போது இந்த நான்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இந்திய மருத்துவத்தில் மிகப்பெரிய புரட்சியான செயலாக பார்க்கப்படுகிறது.

டைரோசினீமியா டைப் 1 என்ற மரபணு நோய் குழந்தைகளை தாக்கக் கூடியதாகும். இந்த நோயால் தாக்கப்பட்ட குழந்தைகள் முறையான மருத்துவம் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் பத்து வயதிற்குள் இறக்க நேரிடும். இந்த நோய்க்கு ஒரு வருடத்திற்கு 2.2 கோடி ரூபாய் முதல் 6.5 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டியிருந்தது. தற்போது நிடிசினோன் என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இந்த செலவு 2.5 லட்ச ரூபாயாக குறைக்கப்பட்டு இருக்கிறது.

இதுபோன்று 3 அரிய வகை நோய்களுக்கு மருந்துகளை கண்டுபிடித்து இருக்கிறது இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள். இந்தியா முழுவதும் ஆண்டிற்கு 8 கோடியில் இருந்து 10 கோடி மக்கள் இந்த மருந்துகளால் பயன் பெறுவர். ஜெனாரா பார்மா,எம்எஸ்என் பார்மாசூட்டிகல்ஸ் மற்றும் அக்கும்ஸ் பார்மாசூட்டிகல்ஸ் ஆகிய மருந்து நிறுவனங்கள் இந்த மருந்துகளை தயாரித்து இருக்கின்றன.

Next Post

ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: வாக்குச்சாவடி முகவர் மாரடைப்பால் மரணம்..!

Sat Nov 25 , 2023
சட்டபேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடந்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தின் பாலி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடியில், முகவர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார். 200 உறுப்பினர்களை கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டசபையின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. அதனைத்தொடர்ந்து ராஜஸ்தானில் உள்ள 200 சட்டமன்ற தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. 199 தொகுதிகளில் 5 லட்சத்து 26 ஆயிரத்து 90 ஆயிரத்து 146 வாக்காளர்கள் இருப்பதாக […]

You May Like