fbpx

ஐபிஎல் 2023 பஞ்சாப் அணியிடம் விழுந்தது மும்பை……! ஸ்டம்பை 2 துண்டுகளாக உடைத்த பஞ்சாப் அணியின் முக்கிய வீரர்….!

ஐபிஎல் சீசனில் தற்போதைய தொடரில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் மும்பை அணியை பஞ்சாப் அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆரம்பத்தில் பஞ்சாப் அணியின் வீரர்கள் சற்றே தடுமாறி தான் போனார்கள்.

ஆனால் இறுதியில் சாம்கரன் ஹர்ப்தீப்சிங் உள்ளிட்டோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கட்டுகளை இழந்து 214 ரன்களை குவித்தது. ஆகவே இதற்கு பின்னர் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மாவும், இஷாந்த் கிஷனும் நிதானமாக விளையாட்டினர்.

இந்த நிலையில், ஒரு ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார், அடுத்ததாக கேமரூன் கிரீன் களம்புகுந்தார். ரோகித் சர்மா கேமரூன் கிரீன் ஜோடி மிகவும் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது. ரோஹித் சர்மா 27 பந்துகளை சந்தித்து 44 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.

இன்னொரு புறம் சிறப்பாக விளையாடிய கேமரா கிரீன் 67 ரன்களை சேர்த்தார் இதற்கு முன்னர் நடைபெற்ற போட்டிகளின் மோசமான ஆட்டத்தை வேறுபடுத்திய சூரியகுமார் யாதவ் இந்த போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடி 57 ரன்களை சேர்த்தார்.

அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சங்கம் சிறப்பாக விளையாடினாலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடததால் தோல்வியை தழுவியது மும்பை. 20 ஓவர் முடிவில் 201 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆகவே 13 ஆண்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி தோல்வியை சந்தித்தது. பஞ்சாப் அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது அர்ஷ்தீப்சிங்தான்.

கடைசி ஓவரை வீசிய அவர் மும்பை அணியின் வெற்றி கனவை தகர்த்தார். கடைசி ஓவரின் 13 ரன்கள் தேவை என்ற நிலையில், வெறும் 2 இடங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கட்டுகளை கைப்பற்றினார். குறிப்பாக ஹர்ஷ்தீப் சிங் வீசிய 3வது பந்தை அடிக்க முயற்சி செய்த திலக் வர்மா போட்ல்டாகி வெளியேறினார். ஆகவே மிடில் ஸ்டம்ப் 2 துண்டுகளாக உடைந்தது.

அடுத்ததாக களம் இறங்கிய நேகிரா முதல் பந்திலயே திலக்வர்மா போலவே ஆட்டம் இழந்தார். ஹர்ஷ்தீப் வீசிய இந்த பந்தும் மிடில் ஸ்டம்பை இரண்டாக உடைத்தது.

இந்தப் போட்டியில் ஹர்ஷ்தீப்சிங் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் அவரால் பிசிசிஐ 20 லட்சம் ரூபாய் நஷ்டம் ஆகியிருக்கிறது. அதாவது எல்இடி விளக்குகளுடன் கூடிய ஒரு ஜோடி ஸ்டம்பின் விலை 20 லட்சம் ரூபாய் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

Next Post

#Breaking: அமைச்சர் பி.டி.ஆர் ஆடியோ விவகாரம்...! இன்று ஆளுநர் ரவியை சந்திக்கும் பாஜக...!

Sun Apr 23 , 2023
தமிழக நிதி அமைச்சர் பேசி வெளிவந்த ஒலி நாடாவை சுதந்திரமான தடயவியல் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஆளுநரிடம் புகார் கொடுக்க உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில்; தமிழக நிதியமைச்சர்‌ பி.டி.ஆர்‌.பழனிவேல்‌ தியாகராஜன்‌, திமுக தலைவரும்‌, தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின்‌ மகன்‌ உதயநிதி ஸ்டாலின்‌ மற்றும்‌ மருமகன்‌ சபரீசன்‌ ஆகியோர்‌ ஊழல்‌ மூலம்‌, ஒரே ஆண்டில்‌, 30,000 கோடி ரூபாய்‌ […]

You May Like