16வது ஐபிஎல் சீசன் தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதியது. இதில் மகேந்திர சிங் தோனி 7 பந்தங்களை சந்தித்து ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸர் உட்பட 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இத்தகைய சூழ்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 200 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்று பெருமையை தோனி பெற்று இருக்கிறார். இதன் மூலமாக ஐபிஎல் தொடரில் ஒரே அணிக்காக அதிக சிக்சர்களை அடித்த வீரர்களின் பட்டியலில் தோனி 5வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்ற கிறிஸ் கெய்ல் பெங்களூரு அணிக்காக 239 சிக்ஸர்களை விளாசி உள்ளார். அவரை தொடர்ந்து ஏ பி டி வில்லியர்ஸ் பெங்களூர் அணிக்காக 238 சிக்ஸர்களை அடித்து இருக்கிறார். அவர் 2வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள போலார்ட் மும்பை அணிக்காக 223 சிக்ஸர்களை விளாசி இருக்கிறார்.
விராட் கோலி பெங்களூர் அணிக்காக 218 சிக்ஸர்களை அடித்து இருக்கிறார். அவர் 4வது இடத்தை பிடித்திருக்கிறார் வரை எடுத்து தற்போது சென்னை அணிக்காக 200 சிக்ஸர்களை அடித்து 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளார் மகேந்திர சிங் டோனி