16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
ஆகவே ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் களம் இறங்கினர். இதில் ஜெயிஸ்வால் பத்திரங்கள் எடுத்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து, ஜாஸ் பட்லருடன் இணைந்த படிக்கல் அதிரடியாக ஆடினார்.
இந்த ஜோடி 2வது விக்கெட்டிற்கு 77 ரன்கள் சேர்த்தது இத்தகைய சூழ்நிலைகள் தான் படிக்கல் 38 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அதன் பிறகு அடுத்த பந்திலேயே சஞ்சீவ் சாம்சன் வந்த உடனேயே டக் அவுட் ஆனார். சென்னை அணியின் வீரர் ஜடேஜா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் சேர்த்தது. ஆகவே 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி பேட்டிங் செய்ய தொடங்கியது.
போட்டியின் இறுதி நிமிடங்களில் திவான் கான்வாய் அரைசதம் அடித்தார் கேப்டன் தோனி 32 ரண்களும், அதனைத் தொடர்ந்து, ரஹானே 31 ரன்களும், சிவன் துபே மற்றும் மொயின் அலி 7 ரன்களும், ஜடேஜா 25 ரன்களும், ராயுடு 1 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். முன்னணி வீரர்களின் கவனக்குறைவான ஆட்டம் காரணமாக, சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன் மூலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது.