fbpx

இங்கிலாந்து பிரதமர் ஆவாரா?… இந்திய வம்சாவளி ரிஷி சுனக்…!

இங்கிலாந்து, பிரதமர் வேட்பாளராக இறுதி கட்ட போட்டிக்கு இந்திய வம்சாவளி ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு போட்டியாக லிஸ் டிரஸ் களத்தில் உள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ததை அடுத்து அந்த பதவிக்கு போட்டி கடுமையானது. இதில், இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் , லிஸ் டிரஸ், பென்னி உட்பட எட்டு பேர் போட்டி போட்டனர். இந்நிலையில் இதுவரை நடை பெற்ற வாக்கெடுப்பில் ரிஷி சுனக் 137 வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார்.

இரண்டாம் இடத்தில 113 வாக்குகள் பெற்று லிஸ் டிரஸ் உள்ளார். மேலும் 105 வாக்குகள் பெற்று பென்னி இறுதி போட்டியில் இருந்து வெளியேறினார்.. இதனால் கடைசி சுற்றாக கன்சர்வேட்டிவ் கட்சியின் இரண்டு லட்சம் உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். அதில் , ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் இருவருக்கும் இடையே போட்டி நடைபெறும். இதில் வெற்றி பெறுபவர்கள் தான் இங்கிலாந்து பிரதமராக தேர்ந்தெடுக்க படுவார்கள்.
இதில் வெற்றி வாய்ப்பு இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் அவர்களுக்கு தான் அதிகமாக இருப்பதாக கருத்துக்கள் நிலவி வருகின்றன.

Baskar

Next Post

’மக்களின் வயிற்றில் அடிக்கும் மத்திய-மாநில அரசுகளுக்கு கடும் கண்டனம்’..! விஜயகாந்த்

Thu Jul 21 , 2022
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் ஏற்படுமோ என்ற அச்சம் தற்போது அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பேக்கிங் செய்யப்பட்ட அரிசி, கோதுமை மாவு, பருப்பு வகைகள், பால், தயிர், மோர், லஸ்ஸி, ஆகியவற்றுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், உணவு பொருட்களின் விலை ரூ.2 முதல் ரூ.3 வரை உயர்ந்துள்ளது. மேலும், ரூ.1,000 மதிப்புள்ள ஹோட்டல் அறைகளுக்கு 12 […]
’மக்களின் வயிற்றில் அடிக்கும் மத்திய-மாநில அரசுகளுக்கு கடும் கண்டனம்’..! விஜயகாந்த்

You May Like