fbpx

ஏலம் விடப்படுகிறதா விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்…..? வெளியான அறிவிப்பால் பரபரப்பு……!

கடந்த 1998 ஆம் வருடம் திருமங்கலம் முதல் சாத்தூர் இடையே நடைபெற்ற சாலை பணிகளை சவரி முத்து என்ற ஒப்பந்ததாரர் மேற்கொண்டு வந்தார். 30 விழுக்காடு பணிகள் அவரால் முடிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென்று வேறு ஒரு நபருக்கு ஒப்பந்த மாற்றப்பட்டது.

நீண்ட நிலை எது தனக்கான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று தெரிவித்து ஒப்பந்ததாரர் வழக்கு தொடர்ந்தார். 2 கோடியே 35 லட்சம் ரூபாய் தொகையை வழங்குமாறு கடந்த 2002 ஆம் வருடம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது இந்த தொகை இன்னும் வழங்கப்படாத சூழ்நிலையில், ஒப்பந்ததாரர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் நீதிபதியின் உத்தரவின் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஏல அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்ட கூடுதல் நீதிபதி ஹேமானந்தகுமார் உத்தரவின் அடிப்படையில் நீதிமன்ற பணியாளர்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சுவற்றில் ஏல அறிவிப்பு நோட்டீசை ஒட்டி உள்ளனர். மார்ச் மாதம் 31ஆம் தேதி ஏலம் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது இந்த சம்பவம் காரணமாக விருதுநகரில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

Next Post

பெண்களே நற்செய்தி.. ஒரே நாளில் ரூ.800 குறைந்த தங்கம் விலை...

Wed Mar 22 , 2023
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.43,760-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்த நிலையில் அமெரிக்காவில் […]
gold

You May Like