குஜராத்தின் வதோதராவில் வசிக்கும் பெண்ணின் முதல் கணவர் 2011-ஆம் வருடம் சாலை விபத்தில் மரணமடைந்தார். இதை தொடர்ந்து அந்த பெண் திருமண தகவல் இணையதளம் மூலம் வரன் தேடி வந்தார். அப்போது விராஜ் வர்தன் என்பவரை சந்தித்தார். 2014-ஆம் வருடம் பிப்ரவரி மாதம் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு காஷ்மீருக்கு தேனிலவுக்குச் சென்றனர். ஆனால் விராஜ் வர்தன் தாம்பத்ய உறவுக்கு உடன்படவில்லை. பல நாட்கள் சாக்குப்போக்குகளை சொல்லிக் கொண்டே இருந்தார்.
அந்த பெண் அவரை வற்புறுத்தியபோது, சில வருடங்களுக்கு முன்பு ரஷியாவில் இருந்தபோது அவருக்கு ஏற்பட்ட ஒரு விபத்து காரணமாக தன்னால் உடலுறவு கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். மேலும் ஒரு சிறிய அறுவை சிகிச்சைக்குப் பிறகு தான் சரியாகிவிடும் என்று அந்தப் பெண்ணிடம் கூறியுள்ளார். ஜனவரி 2020-வருடம் அவர் தனது எடையைக் குறைக்க அறுவை சிகிச்சை செய்ய போவதாக கூறி கொல்கத்தா சென்றார். ஆனால் விராஜ் வர்தன் உண்மையில் ஒரு பெண் அவர் ஆண் உறுப்புகளை பொருத்துவதற்காகவும் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காகவும் கொல்கத்தா சென்று இருக்கிறார்.
இந்த விவகாரம் அந்த பெண்ணுக்கு பிறகு தெரிந்தது. இதை தொடர்ந்து அந்த பெண் கோத்ரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனது கணவர் தன்னுடன் இயற்கைக்கு முரனாக உடலுறவு கொள்வதாகவும் இதைப் பற்றி யாரிடமாவது சொன்னால் மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என்று தன்னை மிரட்டியதாகவும் அவர் புகார் அளித்தார். இதையடுத்து டெல்லியில் இருந்து குற்றவாளி வதோதராவுக்கு அழைத்து வரப்பட்டதாக கோத்ரி காவல் இன்ஸ்பெக்டர் எம்.கே.குர்ஜார் கூறினார்.